திருடன் நீயன்றோ….
பல்லவி
திருடன் நீயன்றோ திருமாலே கேசவா
திருடியென் மனத்தை நீ வைத்திருப்பதாலே
அனுபல்லவி
திருடி வெண்ணைதனை உண்டதனாலும்
திருவை மார்பில் நீ சுமப்பதனலும்
சரணம்
ஒருத்தி மனாய்ப் பிறந்து நீ
ஒருத்திமகனாய் வளர்ந்தவனே
பெரும் பிணி பவக்கடல் கடந்திட எனக்குன்
அருள் தர வேண்டுமென உனையே துதித்தேன்
No comments:
Post a Comment