கீதமிசைத்துன்…..
பல்லவி
கீதமிசைத்துன் பாதம் பணிந்தேன்
நாதவடிவானவனே நமச்சிவாயனே
அனுபல்லவி
சீதக்கடல் துயில் கேசவன் நேசனே
மாதா பார்வதியின் மனங்கவரீசனே
சரணம்
பாதச்சிலம்பணிந்து நாட்டியமாடிடும்
வேதப் பொருளே விமலா விடைபாக
யாதுமாகி நின்ற ஆதியே சோதிய
வேதனை வினை தீர்ப்பாயென உனை வேண்டியே
No comments:
Post a Comment