Sunday, 30 January 2022

கந்தன் கை வேல்….

 

                                                      கந்தன் கை வேல்….


                                                              பல்லவி

                                             கந்தன் கை வேல் சக்தியளித்தவேல்

                                             மந்திரமான வேல் மறைகளும் போற்றும் வேல்

                                                            அனுபல்லவி

                                             நந்தி கணங்களும் இந்திரனும் வணங்கும் வேல்

                                             சந்திர சூரியரின் ஒளியையும் மிஞ்சும் வேல்

                                                                 சரணம்

                                             உந்தி கமலன் கேசவன்  மருகன்

                                             சந்ததம் கையிலேந்தும் வெற்றி வேல் வீரவேல்

                                             நிந்தனை புரிந்த சூரனையழித்த வேல்

                                             வந்தனை புரிவோர்க்கு அருள் தரும் சக்தி வேல்


                                             தந்தைக்கு மந்திரப் பொருள் சொன்ன ஞானவேல்

                                             மந்தமதி தாரகனை வதம் செய்த வீரவேல்

                                             செந்திலாண்டவன் போற்றும் வெற்றிவேல்

                                             செந்தமிழ்க் கடவுள் குகனேந்துமருள் வேல்

                                              


                                             


திரிபுரசுந்தரியே….

முழுமதி நிகர்த்த முகம்அருள் பொழிய

முப்புர மெரித்த சிவன்மனம் நெகிழ

தழுவிய  இடையில் மேகலை குலுங்க

தாளா நகில்கனம் இடைமெலத் துவள

கழைவில் லுடனே கடிமலர் அம்பும்

கையிலங் குசமும் பாசமும் தரித்து

தொழுதிடும் அடியோர் முன்வந் தருளும்

தேவி என்முன் நீவர வேண்டும் .


                                               திரிபுரசுந்தரியே….


                                                  பல்லவி

                                திரிபுரசுந்தரியே தினமுனைப் பணிந்தேன்

                                அரியயனரனும் கரம் பணிந்தேத்தும்

                                               அனுபல்லவி

                                கரியவன் கேசவன் சோதரி மாயே

                                சரிநிகர் சமானமில்லாதவளே        

                                                      சரணம்

                                நிலவொளியென முகம்  அருளினைப் பொழிய

                                திரிபுரமெரித்த சிவன் மனம் மகிழ   

                                அழகிய இடையில் மேகலையாட

                                கனந்தரும் முலையால் இடையது துவள


                                கரும்பு வில்லுடன் மலர்க்கணையேந்தி

                                கையிலங்குசமும் பாசமும் தாங்கி 

                                வணங்கிடுமடியார்க்கு காட்சிதரும் தேவி     

                                என்முன் எழுந்தருள வேண்டுமெனத் துதித்தேன்          

குறைதீர்க்க வருவாய் குகனே!

 



குறைதீர்க்க வருவாய் குகனே!

     பல்லவி

கறை பிறவிப் பிணி போக்க வருவாய் முருகா

மறைபோற்றும் மாமணியே கந்தா குமரா

     அனுபல்லவி

பிறைசூடிய உன் தந்தை

கறைகண்டனுக்கே

மறைபொருள் சொன்ன குருபரனே குகனே

          சரணம்

குறமகள் வள்ளியின் கரம் பிடித்த வேலவனே

அறம் பொருளின்பமனைத்தையும் அளிப்பவனே

சிறையில் பிறந்த கேசவன் மருகோனே

குறைதீர்க்க விரைந்து நீ

மயில் மீது  வருவாயே

Saturday, 29 January 2022

திருக்குழலம்மையை

 

                                                     திருக்குழலம்மையை….

                                                       

                                                                       பல்லவி                  

                                                  திருக்குழலம்மையை சூளிகாம்பாளை

                                                  கருக்காக்குமம்பிகையை  மனமாரத்துதித்தேன்

                                                                     அனுபல்லவி

                                                  திருவுறை மணிமார்பன் கேசவன் சோதரியை

                                                  உத்திராபதீச்வரர் மனங்கவர் நாயகியை                                           

                                                                        சரணம்

                                                  இருவினைப் பயன்கள் தொலைந்திட வேண்டியும்

                                                  இனிப் பிறவாதிருக்கும் வரந்தரக் கோரியும்

                                                  தருமம் தழைத்திடும் திருச்செங்காட்டாங்குடி

                                                  திருத்தலத்தில் பெருமையுடன் கோயில் கொண்டிருக்கும்

Friday, 28 January 2022

முருகனை

 முருகப்பெருமானை பற்றிய 25  தகவல்கள்

1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

5. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

6. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

7. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

8. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

9. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

10. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

11. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

12. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

13. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

14. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

15. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

16. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

17. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

18. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

19. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

20. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

21.முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகை யில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.

22. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

23. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

24. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

25. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.


                                                       முருகனை…..


                                                        பல்லவி

                                       முருகனைப் பணிவாய் மனமே - தினமே

                                       முருகனைப் பணிவாய் மனமே……

                                                          துரிதம்

                                       அரனயனரியும்  அமரேந்திரனும்

                                       நரர் சுரர் நாரதர் நந்தி கணங்கள்

                                       சுகசனகாதியர் வேதங்கள் மற்றும்

                                       கடவுளரனைவரும் கரம் பணிந்தேத்தும்                                       

                                                       அனுபல்லவி

                                       திருமால் கேசவன் மருகனைக் குமரனை

                                       அருமறைகள் போற்றும் அழகனை சண்முகனை

                                                             சரணங்கள்

                                       அறுபகைகள் அழித்த ஆறுமுகனை குகனை

                                       சூரனை வென்று செந்தூரி்ல் அமர்ந்தவனை

                                       தாரகனையழித்து பரங்குன்றம் நின்றவனை       

                                       சிங்கமுகனை வதைத்து போரூரில் குடிகொண்ட…( முருகனை…)


                                       அங்காரக தோஷம் நீக்கும் சுப்ரமண்யனை

                                       சிங்காரவேலனின் கந்தபுராணம்தனை

                                       திங்கள் தோறும் படிப்பவர்க்கருள்பவனை

                                       கங்கை தாங்கிய காங்கேயனைக் குகனை….. ( முருகனை…)


                                       சரவணப் பொய்கையிலுதித்த சரவணனை

                                       கார்த்திகைப் பெண்டிர் வளர்த்த கார்த்திகேயனை

                                       ஆறுருவும் ஓருருவாய் சக்தி செய்த கந்தனை

                                       ஆறுபடை வீடுடைய ஆறுமுகவேலனை….. ( முருகனை…)


                                       அங்குசம் கோழிக்கொடி வச்சிரமம்பு வேல்

                                       தாங்கியே வலப்புறம் அபயகரம் நீட்ட

                                       தாமரை தண்டாயுதம் மழு வில் மணியுடனே

                                       வரந்தருமிடக்கரம் காட்டிடுமழகனை…..  ( முருகனை…)

                                       

                                      திருப்புகழ் பாடியே அருணகிரிநாதர்

                                      பெருமையுடன் போற்றிய சரவணபவனை

                                      ஆளுடைப் பிள்ளையாய் அவதரித்த பாலனை

                                      குன்றுதோறாடும் குருபரனை சிலம்பனை….   ( முருகனை…)

                                      

                                      அரசனாயாண்டியாய் பாலனாயுவனாய்

                                      துறவறக் கோலம் பூண்ட தண்டபாணியாய்

                                      பலவிதமாய்க் காட்சி தரும் வேலாயுதனை

                                      விசாகனெனும் பெயர் கொண்ட மயில்வாகனனை ( முருகனை..)


                                     நான்முகனின் படைக்குந்தொழில் செய்த சிவபாலனை        

                                     வள்ளி தெய்வானையை மணந்த குருகுகனை

                                     கௌமாரக் கடவுளை தேவசேனாபதியை

                                     ஞானசக்தி வேலேந்தும் ஞானபண்டிதனை….. ( முருகனை…)

                                                

                                     உலகெங்கும் கோயில்கொண்ட கலியுகவரதனை

                                     சிவசக்தி வடிவான சேவற்கொடியோனை

                                     அலகிலாவிளையாடல் பல புரிந்தவனை

                                     நிலையிலா உலகில் நிலைத்திருப்பவனை….( முருகனை…)

                  

    

                      

அதிசயமானவளே….

தை மூன்றாம்  வெள்ளிக்கிழமை

"ஶ்ரியம் வித்யாம் புத்திம் ஜகதி நமதாம் த்வாமத யஶ:

ஸுபுத்ரான் ப்ராதத்தே தவ சடிதி காமாக்ஷி கருணா

த்ரிலோக்யா மாதிக்யம் த்ரிபுர பரிபந்தி ப்ரணயினி

ப்ரணாமஸ் த்வத்பாதே ஶமித துரிதே கிம் ந குருதே"

மூக பஞ்ச சதீ.... ஸ்துதி சதகம்....

திரிபுர வைரியான எனது தந்தை ஏகாம்ரநாதரின் பால் அன்பு பூண்டவளே! காமாக்ஷி! என் தாயே!!உலகில் உன்னை வணங்குகிறவர்களுக்கு உன் கருணையானது, செல்வம், கல்வி, அறிவு, மேலும் புகழ், நல்ல குழந்தைகளையும் சீக்கிரமே கொடுக்கிறது. மேலும் மூவுலகிலும் உயர்வையும் கொடுக்கிறது! பாவத்தை நீக்கும் உன் சரணங்களில் செய்யப்படும் துதியானது எதைத்தான் செய்யவில்லை!


                                        அதிசயமானவளே….

                                                     பல்லவி                                  

                                  அதிசயமானவளே ஆதியே பழம்பொருளே

                                  மேதினியோர் போற்றும் வேதப்பரிபுரையே                           

                                                    அனுபல்லவி

                                  மதி புனல் சூடிய திரிபுராந்தகனை

                                  பதியாக க்கொண்ட கேசவன் சோதரி

                                                        சரணம்

                                  கதி நீயென்றே பணிபவர்க்கெல்லாம்

                                  தனம் புகழ் கல்வி மக்கட்ச்செல்வம்

                                  அனைத்தையுமளிப்பவளே தாயே காமாக்ஷி 

                                   உனையே துதித்தேன் எனக்கருள் புரிவாய்


                                   

                                  

Wednesday, 26 January 2022

இடுக்கண்

 இடுகாட்டு எலும்பினை மாலையாய் பூண்டுச் 

சுடுகாட்டு சாம்பல் பூசும் உடுக்கை யொலி கிளப்பியே உலகை ரட்சித்திடும்

ஆயி திரு கருமாரியே

எக்கால தேவியே காரண சவுந்தரி 

கண்ணகியே உனை பணிந்தேன்

அருளோங்கும் அருள்திரு அரங்கனின் தங்கையே அன்னை கண்ணனூர் மாரியே 


                                       இடுக்கண்….


                                       பல்லவி

                      இடுக்கண் களைந்திடும் சமயபுரத்தாளே எனை

                      தடுத்தாட் கொள்ள தருணமிதுவே     

                                      அனுபல்லவி

                      படுத்துறங்கும் திருமால் கேசவன் சோதரியே                  

                      எடுத்த ஜனனம் கணக்கிலடங்காது

                                           சரணம்

                      இடுகாட்டெலும்பினை மாலையாயணிந்தவளே

                      சுடுகாட்டில் கிடக்கும் சாம்பல்தனைப் பூசிய

                      உடுக்கையொலியெழுப்பி உலகினைக் காப்பவளே

                      அடுத்து வந்த என்னை ஆண்டருள்வாயே                      

Monday, 24 January 2022

பித்துப்பிடித்துன்

 பக்தி நெறி மேலிட்டு பித்தனாய் உன் சன்னதியில் 

கவிபாடி தான் பணிந்தேன்

துக்கம் விலக உன் சன்னதியை வலம் வந்தேன் 

துன்பமதை தீர்த்தருளுவாய்

ஓங்கார தேவியே உஜ்ஜியினி காளியே 

பொன் கரகம் பூண்ட தாயே

அருளோங்கும் அருள்தரு அரங்கனின் தங்கையே அன்னை கண்ணனூர் மாரியே

 

                                        பித்துப்பிடித்துன்….


                                                    பல்லவி

                                  பித்துப்பிடித்துன் சன்னதியில் கிடந்தேன்

                                  முத்துமாரியே சமயபுரத்தாளே 

                                                   அனுபல்லவி

                                  பக்தி நெறியாலுனைக் கவிபாடித் துதித்தேன்

                                  சித்தர்கள் போற்றும் கேசவன் சோதரியே

                                                       சரணம்

                                  புத்தம் புது மலர்தூவி உஜ்ஐயினி காளியே

                                  நித்தமுனைத் துதித்தேன் ஓங்காரதேவிய

                                  அத்தனை சிறப்புடைய கண்ணனூர் மாரியே

                                  சித்தம் தெளிவுபெற மகமாயி உனைப் பணிந்தேன்


                                  பொன் கரகம் பூண்டவளே புகழ்மிகு நீலி

                                  துன்பம் தீர்த்தருள்வாய் பசும்பொற்கொடியே

                                  சன்னதியை வலம் வந்தேன் துக்கம் போக்கிடுவாய்

                                  அன்னையே  எனக்கருள்வாய் ஶ்ரீக்ருஷ்ணமாரி

                                  

பாலனை முகுந்தனை

 

                                          பாலனை முகுந்தனை….


                                                     பல்லவி

                                   பாலனை முகுந்தனை மனமாரத்துதித்தேன்

                                   நீலவண்ணனைக் கேசவனை மாதவனை

                                                    அனுபல்லவி

                                   கோலமயில்பீலி கொண்டையில் சூடிய

                                   ஞாலமுண்டவாயனை குழலூதும் கண்ணனை

                                                        சரணம்

                                   தாமரை மலர்க் கரத்தால் தாமரைச்சரணந்தனை

                                   தாமரைச்செவ்வாயில் அழகுடன் வைத்திருக்கும்

                                   மாமறைகள் போற்றும் ஆமருவியப்பனை

                                   தாமரை நாபனை ஆலிலை தனில் துயிலும்

  

அப்பனுக்கோதிய

 

                                                         அப்பனுக்கோதிய….


                                                                  பல்லவி

                                                   அப்பனுக்கோதிய சுப்பிரமணியனை

                                                   தகப்பன் சாமியைப் பழனியில் பணிந்தேன்

                                                                 அனுபல்லவி

                                                   முப்புரமெரித்த ஈசன் சிவன் மகனை

                                                   கப்பிய கரிமுகன் கணபதி சோதரனை

                                                                      சரணம்

                                                   அப்ரமேயன் கேசவன் மருகனை

                                                   ஒப்புயர்வில்லாக் கார்த்திகேயனை

                                                   செப்பமுடையானை சண்முகநாதனை

                                                   இப்பிறப்பறுத்தினி பிறவா வரம் வேண்டி                                                                                                                                                           

அகிலலோக நாயகியை….

சந்திர சடாதரி! முகுந்த சோதரி துங்க

      சலசலோசந மாதரீ

ஸம்ப்ரம பயோதரீ! சுமங்கலி! ஸுலக்ஷணி!

       சாற்றரும் கருணாகரீ!

அந்தரி! வராகி! சாம்பவி! அமலை! ஸுரதோத்ரி!

       ஆதி ஜலஜால ஸூத்ரி!

அகிலாத்ம காரணீ! விநோதசய நாரணி!

     சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! மலைராஜ

சுகுமாரி! கௌமாரி!  உத்

      துங்க கல்யாணி! புஷ்பாஸ்த்ர அம்புஜ பாணி!

தொண்டர்கட் கருள் சர்வாணீ!

      வந்து அரிமலர்பிரமன் ஆதிதுதி வேதஒலி

வளர்த்திருக்கடவூரில் வாழ்   

வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்

வாமி! அபிராமி! உமையே! 

சந்திரனை ஜடையில் தரித்தவளே!, திருமாலுக்கு இளைய சகோதரியே!, தூய தாமரை போன்ற  திருவிழிகளை உடையவளே! காளியே! எக்காலத்தும் தந்தருளும் அமுதம் நிறை தனங்களையுடைய தாயே! மங்கள் வடிவானவளே! அனைத்து லட்சணங்களையும் கொண்ட அழகிற்கு ஒருவரும் ஒவ்வாத அபிராம வல்லியே! வார்த்தைகளால் விவரிக்க முடியாத கருணையின் வடிவானவளே! அனைத்திற்கும் ஆதாரமான துர்க்கையே! உலகம் உய்யும் பொருட்டு பன்றி ரூபத்தில் வந்தவளே! சிவபெருமானின் நாயகியே! பார்வதியே! இன்பம் தருபவளே!, உலகை இயக்கும் மாயவித்தையின் சூத்ரதாரியே! உலக உயிர்களுக்கு காரணமானவளே! வெற்றி மிக்க நாரணியே! முழுமையான ஞான பூரணியே!, பேரழகுடையவளே! ஆதியும் அந்தமும் இல்லாமல் நிரந்தரமாய் விளங்குபவளே! அனைத்துயிர்களையும் காப்பவளே! மலையர்சனின் புதல்வியாக அவதரித்தவளே! என்றும் இளமையாக உள்ளவளே!  அனைத்து மங்களங்களையும் வழங்கும் கல்யாணியே! தாமரை போன்ற திருக்கரங்களில் மலர்க்கணைகளை ஏந்தியவளே!, தொண்டகர்களுக்கு அருள் புரியும் சர்வேஸ்வரியே உன்னை  வணங்குகின்றோம்.

திருமாலும் பிரம்மனும் வந்து துதிக்கின்ற வேத ஒலி முழங்குகின்ற திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே! என்று அன்னையின் உருவ அமைப்பையும், பராக்கிரமத்தையும், அனந்த கல்யாண குணங்களையும், தனிச்சிறப்பையும் உணர்த்துகின்ற பல நாமங்களைக் கூறி துதிக்கின்றார் அபிராமி பட்டர் !


                              அகிலலோக நாயகியை….


                                             பல்லவி

                           அகிலலோக நாயகியை அபிராமியைப் பணிந்தேன்

                           புகழ் மிகு திருக்கடவூர் பதிதனில் வீற்றிருக்கும்

                                             துரிதம்  

                           அமரர்கள்  ரதிபதி   அமரேந்திரனும்

                           குமரன் கணபதி  அரனயனரியும்

                           சுக சனகாதியர் முனிவர்களனைவரும்

                           சகலரும் பணிந்திந்திடும் கேசவன் சோதரி                          

                                             அனுபல்லவி                      

                            இகபரசுகமனைத்துமளித்திடுமீச்வரி

                            புகலிடமவளென மலரடி வணங்கி

                                                  சரணங்கள்

                            திங்கட் பிறைசூடிய திருமுடி அழகுடைய

                            கங்காதரன் சிவனின் மனங்கவர் நாயகி

                           அங்க சௌந்தரியம் கொண்டு ஒருவருக்கும் ஒவ்வாத

                           மங்கள வடிவுடையாள் பங்கய விழியுடையாள்


                           பொங்கும் அமுதம் நிறை தனங்களையுடையவள்

                           எங்கும் நிறைந்திருக்கும்  மாகாளி பைரவி

                           வராக வடிவெடுத்து உலகினைக் காத்தவள்

                           பொங்கரவுக்குடையுடைய துர்கையுமவளே


                           உலகுயிரனைத்தையும் இயக்கும் மாயையவள்

                           மலையரசன் மகளாயவதரித்த உமையவளே

                           ஞான பூரணியும் நாரணியுமவளே

                           மலர்க்கணைகள் வைத்திருக்கும் மலர்க்கரத்தாளவளே 

        

               

                                                                                                                                     

                           

                           

தங்கமயமானவளே….

 25.ஜம்பூமூலநிதே ஜநார்தனநுதே ஜம்பாரிஸம்பாவிதே

ஜம்பூத்வீபமநோஜ்ஞகல்பலதிகே ஜஹ்ந்வாத்மஜாசேகரே! ஜன்மவ்யாதிஜராபஹே ஜலமயே ஜாம்பூநதாலங்க்ருதே ஜம்பூநாத மனோஹரே ஜநநுதே வந்தே (அ)கிலாண்டேஸ்வரி !!

நாவல் மரத்தடியிலுள்ள நிதியே, விஷ்ணுவினால் போற்றப் படுவளே, இந்திரனால் பூஜிக்கப்பட்டவளே. ஜம்பூத்வீபத்தில் விளங்கும் மனதைக் கவரும் கற்பகக் கொடியே, கங்கையை முடியிலணிந்தவளே. பிறப்பு, வியாதி, முதுமை முதலியவற்றை போக்குபவளே, ஜலருபிணி, தங்கத்தால் அழகுபடுத்தப்பட்டவளே. அகிலாண்டேஸ்வரி உன்னை வணங்குகிறேன்.


                                                         தங்கமயமானவளே….      

                                                  

                                                               பல்லவி

                                             தங்கமயமானவளே அகிலாண்டேச்வரி

                                             திங்கள் பிறையும் கங்கையுமணிந்தவளே

                                                             அனுபல்லவி

                                             செங்கண்மால்  கேசவன் மனமகிழ் சோதரி

                                             பங்கயமே சுரபதி துதிக்குமீச்வரியே

                                                                 சரணம்

                                              நாவல் மரத்தடியே வீற்றிருக்கும் நிதியே

                                              நாவலந்தீவிலுறை கற்பக க்கொடியே

                                              ஜனன மரணச்சுழல் பவப்பிணி களைபவளே

                                              ஜல வடிவானவளே கேசவன் சோதரி

                                                                  

                                             

Sunday, 23 January 2022

சங்கமேச்வரனை

 

                                                                சங்கமேச்வரனை….


                                                                            பல்லவி

                                                       சங்கமேச்வரனை கங்காதரனை

                                                       கங்கை மதியணிந்த சங்கரனைத்துதித்தேன்

                                                                        அனுபல்லவி

                                                       அங்கமில் மன்மதனைக் காய்ந்த காமேச்வரனை

                                                       பங்கய நாபன் கேசவன் நேசனை

                                                                           சரணம்

                                                       சங்கரி வேதநாயகியின் பங்கிலுறை

                                                       மங்கைபங்கனை முக்கூடல் நாயகனை

                                                       பொங்கரவணிந்தவனை நமச்சிவாயனை

                                                       மங்காத புகழ் மேவும் சாம்பசதாசிவனை

                                                       

                          

                                            


                                                                    

வேதநாயகியின்….

       

                                           வேதநாயகியின்….

                                                     பல்லவி

                                   வேதநாயகியின் பாதம் பணிந்தேன்

                                   பூதநாதன் சங்கமேச்வர ருடனிருக்கும்

                                                      துரிதம்

                                    ஆதவன் சந்திரனிந்திரன் நரர் சுரர்

                                    சுகசனகாதியர் பிரமன் வணங்கிடும்         

                                                   அனுபல்லவி

                                   மாதவன் கேசவன் மனம் மகிழ் சோதரி

                                   சீத கிரணம் தரும் மதியணிந்தவள்

                                                       சரணம்                                    

                                  ஆதவன் ஒளியை மிஞ்சுமொளி உடையவள்

                                  கீத வாத்திய ஒலிகளை ரசிப்பவள்

                                  வேத சாத்திர புராணங்கள் மற்றும்

                                  பூதலம் போற்றும் அன்னை பராசக்தி

                                  

                                 

                                   

                                  

                         














Friday, 21 January 2022

முப்புரமெரிசெய்த

 தை இரண்டாம்  வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் !


शनैस्तीर्त्वा मोहाम्बुधिमथ समारोढुमनसः
क्रमात्कैवल्याख्यां सुकृतिसुलभां सौधवलभीम् ।
लभन्ते निःश्रेणीमिव झटिति कामाक्षि चरणं
पुरश्चर्याभिस्ते पुरमथनसीमन्तिनि जनाः ॥40॥


ஶனைஸ்தீர்த்வா மோஹாம்புதிமத ஸமாரோடுமனஸ:

க்ரமாத்கைவல்யாக்யாம் ஸுக்ருதிஸுலபாம் ஸௌதவலபீம் 

லபந்தே நி:ஶ்ரேணீமிவ சடிதி காமாக்ஷி சரணம்

புரஶ்சர்யாபிஸ்தே புரமதனஸீமந்தினி ஜனா

 மூக பஞ்ச சதீ....

பாதாரவிந்த சதகம்....

முப்புர வைரியான ஏகாம்ரநாத வல்லபையே!! என் தாயே!! காமாக்ஷி அம்மையே!! மெள்ள மெள்ள ஆசையெனும் கடலைத் தாண்டி, புண்ணியம் செய்தவர்களால் அடையத்தக்க மோக்ஷம் எனும் மேன்மாடத்தை முறையோடு அடைய விரும்பும் மக்கள், ஏணி போல் விளங்கக்கூடிய உன் திருவடியை பலவிதமாக வழிபட்டு அடைகிறார்கள்!!

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி  உமையவளே !

    

                                                    முப்புரமெரிசெய்த….


                                                            பல்லவி

                                          முப்புரமெரிசெய்த ஏகாம்பரேச்வரரின்

                                          ஒரு புறமமர்ந்தவளே தாயே காமாக்ஷி 

                                                         அனுபல்லவி

                                          முப்பெருந்தேவியே கேசவன் சோதரி

                                          இப்பிரபஞ்சமே இனிது போற்றிடும்

                                                             சரணம்

                                          புண்ணியம் செய்த தவத்தினரடியார்                                         

                                          பண்ணிய இருவினைப் பயன்களைத்தொலைத்து

                                          விண்ணுலக முக்தி பெற உனதடியே ஏணியாய்

                                          எண்ணித்துதித்துனை போற்றி வணங்கினர்

                                                                                     

Thursday, 20 January 2022

மழலை முருகனை

 


மழலை முருகனை….

    பல்லவி

மழலை முருகனை மடிவைத்துக் கொஞ்சிடும்

அழலேந்தும் நெற்றிக் கண்ணனைத் துதித்தேன்

     அனுபல்லவி

அழகன் முருகனின் அன்னை பார்வதியும்

அருகிருந்து மகிழ்வுடன்

அதனை ரசித்திருக்க

          சரணம்

சுழல் சக்கரக்கையன் கேசவன் மருகன்

அழகுக் கார்த்திகைப் பெண்டிர் வளர்த்த கார்த்திகேயன்

தழுவி உமையெடுத்து

அணைத்த ஆறுமுகன்

நிழலெனக் கழலடி

தொழுபவர்க் கருள்பவன்

சிலையாயிருந்து…….

 

                                   சிலையாயிருந்து…….


                                          பல்லவி

                           சிலையாயிருந்து அருள் புரிபவளே

                           மலைமகளுனையே சரணடைந்தேனே

                                        அனுல்லவி

                           அலைமகளும் நீயே கலைமகளும் நீயே

                           இலையில் உறங்கிய கேசவன் சோதரியே

                                           சரணம்

                           அலகிலா விளையாடல் பல புரிபவளே

                           நிலையா உலகில் நிலைத்திருப்பவளே

                           நிலைத்த உன் திருவடிக் கமலங்கள் மீது

                           தலை வைக்கும் பாக்கியம் தந்தருள்வாயே

                           

                               

திருநிலைநாயகியை

     


                                       திருநிலைநாயகியை…..


                                               பல்லவி

                               திருநிலை நாயகியை உமாமகேச்வரியை

                               பிரமாபுரம் தலத்தில் மனமாரத்துதித்தேன்

                                                 அனுபல்லவி         

                               திருமால் தாடாளன் கேசவன் சோதரியை

                               திருநீலகண்டனின் ஒருபாகத்தமர்ந்தவளை

                                                     சரணம்

                               திருமுலைப் பாலமுது சம்மந்தருக்கூட்டிய

                               பெருமைக்குரியவளை பெரிய நாயகியை       

                               அருமறைகள் சாத்திரங்கள் ஆகமங்கள் போற்றும்

                               திரிபுரசுந்தரியை எனக்கருள வேண்டி                             

                               

                            

Wednesday, 19 January 2022

எப்போதும்

 


                           எப்போதும்….


                                           பல்லவி

                     எப்போதும் முருகா எந்தன் துணை நீயே

                     முப்போதுமுனையே எண்ணித் துதித்தேன்

                                          அனுபல்லவி

                      அப்பன் சிவனுக்கு மந்திரப்பொருள் சொன்னவனே

                      கப்பிய கரிமுன் சோதரனே குமரா

                                               சரணம்

                      ஒப்பிலாமணியே கேசவன் மருகனே

                      இப்பிறப்பிலெனையாளும் சண்முகனே 

                      அப்போதைக்கிப்போதே உன் நாமமுரைத்தேன்

                      சுப்பிரமணியனே எனைக்காத்தருள்வாயே

                       

Tuesday, 18 January 2022

மெய்யுருகித் துதிப்போரை

 


                                   மெய்யுருகித் துதிப்போரை….


                                                  பல்லவி

                                  மெய்யுருகித்துதிப்போரை ஒரு போதும் கந்தன்

                                  கை விடுவதில்லையந்த கார்த்திகேயன்

                                                  அனுபல்லவி

                                   பையத்துயிலும் கேசவன் மருகன்

                                   வையத்துள் சிறந்த கலியுக க்கடவுளவன்

                                                       சரணம்

                                   தெய்வத்தின் தெய்வமவன் தேவாதி தேவன்

                                   ஐயனுக்கு மந்திரப் பொருள் சொன்ன குமரன்

                                   தைப்பூச நன்னாளில் பக்கதர்கள் போற்றி

                                   உய்யுமாறெண்ணி வழிபடும் முருகன்

                                                              

வழிபடும் வகையறியேன்….

 இரவும் பகலும் எண்ணற்ற தவறுகள் புரிபவன் நான். தேவீ, உன் அடிமையாகிய என்னைப் பொறுத்தருள்க.

மகாதேவீ! உன்னை எப்படி வரவேற்பதென்று நான் அறியமாட்டேன். உனக்கு எப்படி வந்தனம் செய்வது, உன்னை எப்படி வழிபடுவது என்பதும் தெரியேன், என்னைப் பொறுத்தருள்க.

தெய்வங்களின் தெய்வமே! நான் மந்திரங்களில்லாதவன், சேவையும் பக்தியும் செய்யாதவன். என்னுடைய வழிப்பாட்டில் திருப்தியுற்று அதைப் பூர்த்தி செய்வாயாக.


                                                 வழிபடும் வகையறியேன்….


                                                                பல்லவி

                                            வழிபடும் வகையறியேன் அம்பிகையே தேவி

                                            அழியுமிவ்வுலகில் அழியாதிருப்பவளே

                                                              அனுபல்லவி

                                            விழிக்குத் துணை நீயே கேசவன் சோதரி

                                            மொழிக்குத்துணை உன் ஆயிரம் நாமங்கள்

                                                                  சரணம்

                                            எழில் மிகுந்தவளே தெய்வங்களின் தெய்வமே

                                            பழி பாவம் புரிபவன் நான் மந்திரங்கள் ஒன்றறியேன்

                                            அழகியுனை சேவிக்கும் வழியறியேன் மொழியறியேன்

                                             கழலடி நிழல் தந்து காத்தருள்வாய் தாயே

                                                                                        

           

                                                              

Monday, 17 January 2022

“என்னுள்ளம்”

 பார்த்தேன்,ரசித்தேன்,படைத்தேன், இதோ

என் கண்ணன் instant பாடல்🙏

      “என்னுள்ளம்”


            பல்லவி

என்னுள்ளம் புகுந்தென்னை ஆட்டுவிக்கும் கண்ணனை

மன்னு புகழ் தேவகி மைந்தனைப் பணிந்தேன்

         அனுபல்லவி

கன்னலந்தக் கேசவன் கார்முகில்வண்ணன்

தன்னிகரில்லாத தேவாதி தேவன்

            பல்லவி

கன்னியர் கோபியர் மனங்கவர்க் கள்வன்

எந்நேரமும் முகத்தில் புன்னகையேந்தி

இன்னிசை படைத்திடும் வேய்ங்குழல் வேந்தன்

 அன்னை அசோதையின் அன்புச்செல்வன்

ஒரு முறை…



                                                           ஒரு முறை…


                                                                  பல்லவி

                                        ஒரு முறை கோவிந்தாவென்றழைத்தால் போதும்
                                        அருகினில் வருவான் அருள் மழை பொழிவான்

                                                                அனுபல்லவி

                                        திருமகள் அலமேலு மனம் விரும்பும் நாயகன்
                                        திருவேங்கட மலைமீது கோயில் கொண்டிருப்பவன்
  
                                                                    சரணம்
                                        
                                         தரும நெறி காக்க தரணியிலவதரித்த
                                         திருமால் கேசவன் திருவேங்கடமுடையான்
                                         உருகி மனம் கனிந்து துதிப்பவர்க்கெல்லாம்
                                         இருவினைப் பயன் நீக்கி ஆனந்தம் தருவான்

Friday, 14 January 2022

தேனுகாம்பாளின்…..

 

                                          தேனுகாம்பாளின்…..

                                      

                                                      பல்லவி

                                தேனுகாம்பாளின் மலர்ப் பாதம் பணிந்தேன்

                                தேனுபுரீச்வரர் மனங்கவர் நாயகி

                                                    அனுபல்லவி

                                ஆநிரை மேய்க்கும் கேசவன் சோதரி

                                கூனல் பிறையணிந்த மறை புகழீச்வரி

                                                        சரணம்

                                வானுறை தேவருமிந்திரனும் நான்முகனும்

                                கானுறை முனிவரும் கரம் பணிந்தேத்தும்

                                தேனார் மொழியாள் திரிபுரசுந்தரி

                                ஞானமளித்தென் மன இருள் நீக்கிட

                                                                

அரன் அருளிய…..

 சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும்சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.


                                                                      அரன் அருளிய…..


                                                                      பல்லவி

                                                         அரன் அருளிய சரபேச்வரனை

                                                         வரமருள வேண்டுமென வணங்கித்துதித்தேன்

                                                                    அனுபல்லவி

                                                         பரவாசுதேவன்  கேசவன் நேசனை

                                                         நரர் சுரர் நந்தி இந்திரன் வணங்கிடும்

                                                                       சரணம்

                                                         கரங்கள் நான்கும் கால்களெட்டும்

                                                         சிறகுடன் கூரிய நகமும் சிங்கவாலும்

                                                         கருட மூக்கும் யானைக் கண்ளும்

                                                         கோரப் பற்களும் இரு முகமும் கொண்ட


                                                                                         

   

Thursday, 13 January 2022

ஓசை

        ஓசை

காளை மணியோசை களத்துமணி நெல்லோசை

வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை

தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை

கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை

ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்

வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ

தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக

மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்         

                       - இது கண்ணதாசன் அன்று எழுதியது

டிராக்டர் உழும் ஓசை டவுன்பஸ் வரும் ஓசை

ஆக்டர் உளறுமோசை  அரசியலார் புளுகுமோசைை

குத்துப் பாட்டோசை குடிமகனார் குழறுமோசை

வெத்துப் பேச்சோசை விரசக் கவியோசை

அலைபேசி அழைப்போசை அத்தனையும் மங்கலமாய் 

வாழிய பண் பாடும் மாயமொழி கேட்டிலையோ

போலியர் கையூட்டில் பொருள்சேர்த்துப் பொலிந்திருக்க

ஏழையர் தம் இல்லத்து எழுந்தருள்வாய் தமிழ்ப்பாவாய்

                                        -இது இன்று மாலன் எழுதியது

 ஆலய மணியோசை தூரத்து இசையோசை

 வாலைக்குமரிகளின் வளையல் கரவோசை

 நீலவண்ணக் கண்ணன் கேசவன் குழலோசை

 பாலைக்கறக்கையிலே பசுவின் மடியோசை

 ஓலமிட்டு ஓடிவரும் கடலின் அலையோசை

 சீலமிகு ஓதுவார்கள் ஓதும் தமிழோசை 

 ஆலமுண்ட நீலகண்டன் உடுக்கில் வருமோசை

  இவையனைத்தும் நான் கேட்க வரமருள்வாயெம்பாவாய்

                                    -இது இன்று “அக்ரிஷ்” எழுதிய எசப்பாட்டு

உன்னைத் துதிப்பதன்றி

 

பவானீ? தனது உடம்பெங்கும் யார் திருநீறு பூசிக் கொண்டு, நஞ்சினை உண்டு, நீண்ட திரித்த சடையுடன், கழுத்தில் நாகத்தை அணிந்து மண்டையோட்டை திரு வோடாய் கையில் ஏந்தியிருக்கிறானோ அவனே பசுபதி, உலகத்தின் தலைவன். அவன் எவ்வாறு சிறப்புற்றது? திருமணத்தில் உனது கரம் பற்றியதாலன்றோ!


நிலவொளி தவழும் முகத்தினளே! என்னிடம் மோட் சத்துக்கான விருப்பம் இல்லை, உலகாயத விருப்பங் களையும் நான் கொண்டிருக்கவில்லை. உலகியலறி வையோ, சவுகரியங்களையோ நான் தேடிக்கொண்டிருக்க

வில்லை. உன்னிடம் நான் வேண்டுவதெல்லாம் இதுதான் ம்ருதனி, ருத்ரணி, சிவசிவ பவானி' என்று தியானித்த படி இந்த வாழ்க்கையை நான் வாழ வேண்டும்.


                                      உன்னைத் துதிப்பதன்றி….


                                                பல்லவி

                               உன்னைத் துதிப்பதன்றி வேறொன்றும் வேண்டேன்

                               அன்னையே பவானி கல்யாணி என்றழைத்து

                                               அனுபல்லவி

                               புன்னகை முகத்தாளே  கேசவன் சோதரி

                                மின்னல் கொடி இடையாளே வெண்ணிலவைப் பழிப்பவளே

                                                  சரணம்

                                 திருவோடெனக் கரத்தில் கபாலமேந்தி

                                 திருநீறு பூசி நீண்ட செஞ்சடையுடனே

                                 கருநாகம் கழுத்தணிந்த நஞ்சுண்ட கண்டன்

                                 ஒரு பாகம் தந்து உனைமணந்து சிறப்புற்றான்

                                 

                                 உலகில் நான் பொன்னோ பொருளோ நல்வாழ்வோ

                                 நலந்தரும் புகழோ போகமோ மோட்சமோ      

                                 எதுவும் வேண்டிலேன் தாயே தயாபரியே

                                 அலகிலா விளையாடல் பல புரிபவளே                    


                                  

                                          

                              

Wednesday, 12 January 2022

மனம் விரும்பி….

 Oh GodhE! The famous garland Vyjayanthi worn by Your Lord is indeed full of fragrance. It is desired by Him and hence given a prominent place on His chest. It is indeed constructed from tender forest flowers, which never fade. Inspite of all these glories, it is worn on the chest and not on Your Lord's head over His KirItam (Thiru AbhishEkam). The garland that You wore and presented to the Lord is accepted by Him with joy and worn with love on His KiriTam (sarvEsvara Chinnam) to demonstrate Your garland's superiority over Vyjayanathi maalai. Your Lord's respect by wearing the garland worn by You earlier at a high place (over His crown) indicates His affection and reverence for it over the Vyjayanathi maalai.

Swami Desikan uses five “api” sabdham to decribe the special attributes of Vyajayanthi Maalai here to build up the climax to declare how Godhai's SooDikkoduttha Maalai won over former in status. He says “What if (api) Vyjayanthi Maalai has splendid fragrance (aamOdhavathI api), What if it is worn with desire on the chest (HrudhayangamA api), What if it has the color of love/red)(raaga anvithA api), What if it is tender (lalithA api), What if it has few more special favorable attributes (guNa UttharA api), Vyjayanathi Maalai is not worn on His crown by the Lord. That superior position is reserved for the SoodikkoDuttha Maalai of Godhai”

அம்மா கோதாய்! பெருமாள் திருமார்பில் ஸர்வ காலத்திலுமுள்ள வைஜயந்தீ என்னும் வனமாலையானது, எப்பொழுதும் பரிமளத்தோடும், ஸந்தோஷ மலர்ச்சியோடும், செவ்வியோடும் பெருமாள் திருமார்பை

அலங்கரிப்பதில் ராகத்தோடும், ச்ரேஷ்ட குணங்களோடும், ஸௌகுமார்யம் என்னும் மார்த்தவத்தோடும் கூடி

பெருமாள் திருமார்பிலேயே வசித்துக் கொண்டு மனத்துக்கினியதாயிருந்தாலும்,
அது அவர் திருமுடியிலுள்ள கிரீடத்தை அடைந்த உன் சிரோமாலையால் கீழாக்கப்பட்டதே!

கோதா பிராட்டியே ——நீ , மலர் மாலையை, உன் திருமார்பில் சூடிப் பிறகு அதைக் களைந்து,
எம்பெருமான் சூடிக் கொள்ளச் செய்தாய் .அவன் அதைத் திருமுடியில் கிரீடத்தில் அணிந்தான்.
இப்போது மணம் செய்துகொண்ட இளையாளைத் தலையாலே ஏற்று, மூத்தாளான வைஜயந்தியை மார்பிலேயே வைத்துவிட்டான்.
உன்னுடைய மாலை, வைஜயந்தி மாலை இரண்டுமே மணம் மிக்கவை; இரண்டிலுமே சிகப்பு உண்டு; இரண்டுமே அழகு;
இரண்டுமே ம்ருதுவானவை; இவ்வளவு விஷயங்கள் பொதுவாக இருந்தும், உனது மாலை அவன் திருமுடியில் ஏறியுள்ளது ,
உன் பெருமையைச் சொல்கிறது.


                                              மனம் விரும்பி….

                                                     பல்லவி                 

                                   மனம் விரும்பிக் கேசவன் நீ சூடிக்கொடுத்த மலர்

                                   மாலையையே ஏற்றுத் தன் மகுடத்தில் வைத்துள்ளான்

                                                    அனுபல்லவி

                                   இனி வேறு தனிப் பெருமை வேறென்ன வேண்டும்

                                   சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே ஆண்டாளே     

                                                        சரணம்                                                 

                                           வனமாலையெனும் வைஜயந்தி மாலை

                                           மனதிற்கினியதாய் மார்பணியாயிருந்தாலென்ன

                                           இனிய மணம் தந்தாலென்ன குணமாயிருந்தாலென்ன

                                           சிவந்த தளிராய் இதழாயிருந்துமென்ன

                                                                                                                                    

பாரனைத்தும்

 

                                       பாரனைத்தும்….


                                                       பல்லவி

                                பாரனைத்தும் போற்றும் கோகர்ணேச்வரனை

                                மாரனைக் காய்ந்தவனை மனமாரத்துதித்தேன்

                                                    அனுபல்லவி

                                சூரனை வதைத்த கந்தனைத் தந்தவனை

                                பார்வதி நாயகனைப் பரமேச்வரனை

                                                         சரணம்

                                நாரணன் கேசவனும் பிரமனும் வணங்கிடும்

                                பூரணனைப் புண்ணியமூர்த்தியை சிவனை

                               ஆரணப் பொருளை சோதியனைச் சுடரை

                               நீறணிந்த மேனியனை எனக்கருள வேண்டுமென

Tuesday, 11 January 2022

அகிலமனைத்தும்

 

                                               அகிலமனைத்தும்…


                                                      பல்லவி

                                       அகிலமனைத்தும் அருணாச்சலேனே

                                       சகலமுமந்த சதாசிவனே

                                                     அனுபல்லவி

                                       அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்

                                       ககனம் புவனம் காற்று நீர் நெருப்பவன்

                                                          சரணம் 

                                       சுகசனகாதியர் நரர் சுரரிந்திரன்       

                                       பகலவன் சந்திரன் பிரமன் கேசவன்

                                       சகலரும் வணங்கிடும் பரம்பொருளவனே

                                       புகலிடம் அவனன்றி   வேறி்லை நமக்கே