ஶ்ரீ பிரகதீச்வரனை.......
பல்லவி
ஶ்ரீ பிரகதீச்வரனை பிரார்த்தனை செய்தேன்
துரிதம்
பிரமன் துவங்கி திருமால்வரையில் கடவுளர்
அனைவரும் போற்றித் துதிக்கும் தஞ்சை
அனுபல்லவி
ஶ்ரீ பிரஹன்நாயகி மனம் மகிழ முருகன் கணபதி
துரிதம்
இருவரும் போற்ற தஞ்சை பெரிய கோயில்
குடிகொண்ட கேசவன் பணியும்
சரணம் ( மத்திம காலம்)
மாதொருபாகமுடையான் விடையுடையான்
மதிபுனல் சடை கரி உடை இடையுடையான்
கழுத்திடை பாம்புடையான் தோடுடையான்
அழகுடையான் அருள் விழி மூன்றுடையான்
இராகம் : பந்துவராளி தாளம் : ஆதி ( 2 களை)
No comments:
Post a Comment