பிரசன்ன விநாயகன்.....
பல்லவி
பிரசன்ன விநாயகன் பாதம் பணிந்தேன்
துரிதம்
பிரமராம்பிகா புத்ரம் சென்னகேசவ மித்ரம்
ஶ்ரீசுப்ரம்மண்ய சோதரம் மல்லீஸ்வர குமாரம்
அனுபல்லவி
பிரணவ ரூபமாய் பக்தரை காக்க
பரிவுடன் சென்னையில் எழுந்தருளிய
சரணம்
வரம் தரும் கரமும் அபய கரமும் கொண்ட
அய்ங்கரன் ஆனை முகத்தினன்
நரர்சுரரிந்திரன் நந்தியும் கணங்களும்
அரனயனரியும் பணிந்திடும் தவத்தினன்
இராகம் : தர்பார்
தாளம் : சாபு
No comments:
Post a Comment