இச்சைகொண்டேன்....
பல்லவி
இச்சை கொண்டேன் உன்மேல் கச்சாலீஸ்வரா
மிச்சமெல்லாம் வாழ்வில் துச்சமென நினைந்தேன்
அனுபல்லவி
இச்சகம் பேசி மெச்சுவோர் கேட்கும் வரமெலாம்
தந்தே அருளும்
பிச்சனேயென் மேல் பச்சாத்தாபம் வரவில்லையா
தயவில்லையா
சரணம்
அச்சுதனுமயனும் அடிமுடி காணா சச்சிதானந்தமே
சிவமே அருமருந்தே
மெச்சியடியார் தொழும் கேசவன் நேசனே
பிச்சையாம் உன்னருள் வேண்டி வணங்கியே
இராகம் : நாடகப்ரியா. தாளம் : ஆதி
No comments:
Post a Comment