கனகாங்கி செங்கமலம்.....
பல்லவி
கனகாங்கி செங்கமலம் வீற்றிருக்கும் மணிமார்பா
மல்லீஸ்வரனயனும் தினம் போற்றும் கேசவா
அனுபல்லவி
உனக்காகவேயுருகி உள்ளம் தவித்தேனே
எனக்காக நீயிங்கு எழுந்தருள்வாயே
சரணம்
தனம் புகழ் போகம் அனைத்துமே தந்தெனை
வினைப் பயனெனும் பவச்சுழலிலே வீழ்த்தினாய்
துரிதம்
தினைத்துளியேனுமுன் திருவடி நினைந்திட
எனக்கருள் புரிவையே என் சென்ன கேசவா
இராகம் : கனகாங்கி
தாளம் : கண்டசாபு
No comments:
Post a Comment