அண்ணாமலையானை......
பல்லவி
அண்ணாமலையானைக் கண்ணாரக் கண்டேன்
உண்ணாமுலையாள் உடனிருந்து போற்றும்
அனுபல்லவி
விண்ணாளும் இந்திரனும் மாலயனும் துதிக்கும்
புண்ணியனை புனல் மதி சூடும் சடையோனை
சரணம்
விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்தும் சிவனை
கண்ணழலால் காமனை கணப்பொழுதில் எரித்தவனை
பெண்ணாகி நின்ற பெருமான் மலையோனை
கண்ணால் பருகி கைதொழுது கேசவனும்
இராகம் : வராளி
தாளம் : சாபு
No comments:
Post a Comment