சிவ சிவ சிவயென.....
பல்லவி
சிவ சிவ சிவயென அவன் பெயர் துதித்தால்
பவக்கடல் கடந்திட வழியொன்றுதிக்கும
அனுபல்லவி
நவ நவ தவ நெறி வேறெதும் வேண்டாம்
ஹர ஹர சிவ எனும் நாமமே போதும்
சரணம்
புவனமனைத்தையும் காத்திடும் ஈச்வரன்
தவயோகியர் ஞானியர் போற்றும்
கேசவன் நேசன் மல்லீச்வரன்
மலர்ப் பதம் தனையே மனதினில் நினைந்து
இராகம் : விஜய ஶ்ரீ
தாளம் : ஆதி
No comments:
Post a Comment