நாரதர் பணியும்.....
பல்லவி
நாரதர் பணியும் சாரதியே உன்
தாமரைப் பாதங்களைச் சரணடைந்தேன்
அனுபல்லவி
ஓரவஞ்சனை செய்யாமலே யென்
தீரா பவவினை தீர்த்து வைப்பாய்
சரணம்
மாரரஞ்சனி ஜகந்மாதா தன்
மனம் மகிழ கொலுவிருக்கும் மணிமார்பா
துரிதம்
பார் போற்றும் திருவல்லிக்கேணி வளர்
ஶ்ரீ ரமை மணவாளா கேசவா
இராகம் : மாரரஞ்சனி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment