உத்தமனே கேசவா.....
பல்லவி
உத்தமனே கேசவா பக்தியுடன் உனைப்பணிந்தேன்
உயர்வளிக்கும் பரம்பொருளே உன்சரணமே சரணம்
அனுபல்லவி
எத்தனையோ முறையிட்டும் மெத்தனமேன் ரத்தினாங்கா
சித்தமெல்லாம் உன்நினைவே செய்வதெல்லாம் உன்பொருட்டே
சரணம்
தத்தளிக்கும் என் உள்ளம் அமைதிபெற வேண்டுமென்று
நித்தமுமே உன் பெயரை பக்தியுடன் தினம் பாடி
அச்சுதா மாதவா கோவிந்தாவென்றழைத்து
அடிமையான் கேசவனும் வித்தகனே வேண்டுகின்றேன்
இராகம் : ரத்னாங்கி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment