நாராயணன் .......
பல்லவி
நாராயணன் திவ்ய நாமம் தனைப் போற்றி
பாராயணம் செய் மனமே அனுதினமே ஶ்ரீமன்
அனுபல்லவி
ஆராவமுதனவன் சாரங்கபாணியாய்
ஊரார் மனம் மகிழ குடந்தையில் காட்சி தரும்
சரணம்
பேராயிரம் கொண்ட கேசவனின் திருநாமம்
சீராகப் பாடி தினம் துதிக்க மறந்தாலும்
ஶ்ரீராமா எனச்சொல்லி மனமாரத் தொவழுவோர்க்கு
தீரா வினைதீர்த்து பேரானந்தம் தரும் நாமம்
நூராயிரம் பெயர் சொல்லி அழைத்தாலும்
பாரோர் பலர் போற்ற பாயிரங்கள் படித்தாலும்
ஊராரை ஏமாற்றிப் பொய் சொல்லித் திரியும்
போலி பக்தர்கள் கூப்பிட்டும் வாராத
இராகம் : நாம நாராயணி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment