ஒரு பாகம் உமைக்களித்த.......
( இராகமாலிகை )
பல்லவி ( குறிஞ்சி)
ஒரு பாகம் பிறையணியாள் உமைக்களித்த பெருமானே
பெரு நாகம் பணிந்திறைஞ்சும் திருநாகேச்ஙரனாரே
அனுபல்லவி
( நீலாம்பரி)
கருநாகம் கழுத்தணிந்த திருநாகேஸ்வரனாரே
சரணம்
( புன்னாகவராளி)
திருமாலும் பிரமனுமே அடிமுடியைக்காணாமல்
தடுமாறித் தொழுது நிற்கும் திருநாகேஸ்வரனாரே
ஒன்று பட்ட மனம் வாக்கால் கேசவனும் பணிந்தேன்
குன்று முலை உமை போற்றும் திருநாகேஸ்வரனாரே
( நாதநாமக்ரியா)
அருகிருக்கும் உப்பிலியார் புகழ் நாகேச்வரனாரே
சூரியனார் தீர்த்தமுடை திருநாகேச்ஙரனாரே
இருமடந்தைக்கிடம் கொடுத்த திருநாகேஸ்வரனாரே
திருக்குடந்தை புகழ் வளர்க்கும் திருநாகேஸ்வரனாரே
No comments:
Post a Comment