பதமொன்றே.....
பல்லவி
பதமொன்றே சதமென்றும் பரமசிவா உன்றன்
துரிதம்
கயிலை விட்டிறங்கி மயிலைதனில் வந்து
சயிலேந்திரன் மகள் மணந்த பரமசிவா
அனுபல்லவி
இதம் தரும் இவ்வுலக வாழ்வென்றும் சதமல்ல
விதம் விதமாய்த் தோன்றும் சொந்த பந்தங்களும் சதமல்ல
சரணம்
நிதம் நிதம் இறந்திடும் மனிதரைக் கண்டும்
சதமெனத் தனை மட்டும் நினைந்திடுமென் மனம்
பதப்பட வேண்டியே கேசவன் பணிந்தேன்
மதம் மொழி கடந்துனை தினம் தொழ எனக்குன்றன்
இராகம் : சாரமதி தாளம் : ஆதி
No comments:
Post a Comment