தன்னிகரில்லா......
பல்லவி
தன்னிகரில்லாச் சென்ன கேசவன்
இன்னிசை முழங்க பவனி வருகிறான்
துரிதம்
என்னிரு கண்கள் களிப்புறக் கண்டேன்
புண்ணியம் கோடி செய்தவனானேன்
அனுபல்லவி
கன்னியர் மயங்கும் பொன்னெழில் மேனியன்
காளையர் நாணும் திண் தோளுடையோன்
துரிதம்
புன்னகை ததும்பும் பவள வாயினன்
பொன்னகையணிந்த திருமகள் மார்பன்
சரணம்
சின்னஞ்சிறிய மூர்த்தியே ஆயினும்
மன்னும் புகழ் மிகு கீர்த்தியுடையவன்
துரிதம்
திங்களும் ஞாயிறும் கண்களாய் உடையவன்
எங்களைக் காக்கும் ரகுப்பிரியன் கேசவன்
இராகம் : ரகுப்பிரியா
தாளம் : ஆதி
No comments:
Post a Comment