இன்றே நல்லநாள்......
பல்லவி
இன்றே நல்லநாள்
துரிதம்
சென்ன கேசவன் திருவடி நினைந்திட
அனுபல்லவி
குன்றுதனைக் குடையாக்கி
குவலயம் காத்தவனை
துரிதம்
நாஸிகாபூஷணி நாதனை நினைந்திட
சரணம்
அன்று வாமனனாய் உலகளந்த உத்தமனை
நின்று அரக்கர் குலம்தனை வதைத்த ராகவனை.
சென்று தூதுவனாய் பாண்டவர்க்குப் பரிந்தவனை
என்றும் நன்று செய்யும் கேசவனை நினைந்திட
இராகம் : நாஸிகாபூஷணி
தாளம் : சதுரஸ்ர ஏகம்
No comments:
Post a Comment