நாகசயனனே .......
பல்லவி
நாகசயனனே நாராயணனே
நாமசங்கீர்த்தன காயகப்பிரியனே
அனுபல்லவி
மோகினி வடிவெடுத்து தேவருக்கமுதளித்து
முக்கண்ணனைக் கலந்த மோகன ரூபனே
சரணம்
ஆகம வேத ச்ருதி சாஸ்த்திர புராணங்கள்
அனைத்துக்கும் முதலே மூலப் பொருளே
யாக யோக போக ராகரஸ பலனே
த்யாக ராஜனும் துதிக்கும் கேசவா
இராகம் : காயகப்பிரியா
தாளம் : ஆதி
No comments:
Post a Comment