சிதம்பரம் தலம்......
பல்லவி
சிதம்பரம் தலம் வளர் ஆகாச லிங்கம்
நிதம் நடம் புரிந்திடும் நடராஜ சுந்தரம்
அனுபல்லவி
பதஞ்சலி வியாக்ர பாதரும் போற்றும்
பதம்தனைப் பணிந்து நான் அடைந்தேன் பரவசம்
சரணம் (1)
கதம்ப மலர்களின் மாலைகள் சூடிடும்
சிவகாமி நேசன் சிற்றம்பலவாசன்
துரிதம்
தில்லை மூவாயிரம் வேதியர் துதிக்கும்
பொன்னம்பலவாணன் கனகசபேசன்
சரணம் (2)
வேதமுதல்வன் விடமுண்ட கண்டன்
இதம் தரும் கோடி சூர்யப் பிரகாசன்
துரிதம்
நாதவடிவில் கேசவன் வணங்கும்
ஆனந்த தாண்டவம் ஆடிடும் அழகன்
சரணம் (3)
உம்பர் அனுதினம் தொழும் தேவாதி தேவன்
அம்புலி கங்கையணிந்த ஜடாதரன்
துரிதம்
நம்பும் அடியார்களுக்கின்பம் அளிப்பவன்
அன்பர்களுக்கன்பன் ஆகாச ரூபன்
இராகம் : காம்போஜி தாளம் : கண்ட சாபு
No comments:
Post a Comment