அருள் தருவாய்....
பல்லவி
அருள் தருவாய் கருணைக் கடலே கேசவா
மருள் விழியாள் செங்கமலம் தங்கும் மணி மார்பா
அனுபல்லவி
திருமுருகன் கணபதியை இருகரத்திலேந்தும்
காங்கேய பூஷணி கௌமாரி சோதரா
சரணம்
இருள் சூழ் கானகமே இவ்வுலக வாழ்க்கை
பொருள் புகழ் போகமெலாம் இலை நடுவே தோன்றும்
கதிரவனின் ஒளிக் கீற்றே நிலையான பேரின்ப
பேரொளியாய் உன்னருளைப் பெறவே வேண்டினேன்
இராகம் : காங்கேயபூஷணி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment