ருக்மிணி ரமணா........
பல்லவி
ருக்மிணி ரமணா சென்னகேசவா
திக்கு நீதானய்யா திருவின் நாயகா
அனுபல்லவி
பக்குவமில்லா மனம் படைத்தவனாய்
சிக்கித் தவித்தேன் வெம்பவப் பிணிதனில்
சரணம்
அக்னி வைத்த நெற்றிக் கண்ணனும்
அன்ன வாகனன் பிரமனும் பணி அதி
ச்யாமளாங்க சுந்தர வதனா
அடியவர் நாடிடும் பங்கய சரணா
இராகம் : சியாமளாங்கி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment