என்னருமை........
பல்லவி
என்னருமைக் கேசவனே உன்னழகு வடிவம்
கண்டுள்ளம் களித்ததை நான் என்னென்று சொல்வேன்
அனுபல்லவி
சின்னஞ்சிறிய செம்பவளம் போல வாய் கமலக்கண்
கன்னங்கருநீல வண்ணநிற மேனியெழில்
துரிதம்
மின்னும் கௌஸ்துபமும் மாலைகளும் திருமகளும்
அலங்கரிக்கும் மணிமார்பும் பொன்முடியும் திவ்யமணி தரித்த
சரணம்
இரு புறமும் தேவியர்கள் உடன் அருகே நின்றிருக்க
பெருந் திரளாய் சனகாதி முனிவர்களும் தேவர்களும்
நாரதனும் நான்முகனும் நிற்கும் கோலம் தனை
ஒரு புறமாய் நின்றுருந்து கண குளிரக் கண்டேன்
இராகம் : திவ்யமணி
தாளம் : சதுரஸ்ர அடை
No comments:
Post a Comment