தத்துவப்பொருளே........
பல்லவி
தத்துவப்பொருளே உத்தமனே கேசவா
அனுபல்லவி
நித்யானந்த நிர்மல நிர்குணா
வித்தகர்கள் போற்றும் வேணுகானமூர்த்தி
சரணம்
எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே பிறந்தாலும்
அத்தனை பிறவியிலும் கேசவனேயுன் நாமம்
இரத்தத்தில் கலந்திடும் உடன்பிறந்த பாசம் போல்
சித்தத்தில் மறவாமல் நிலைத்திடல் வேண்டும்
இராகம் : கானமூர்த்தி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment