கல்யாணசுந்தரனே.......
பல்லவி
கல்யாணசுந்தரனே கங்காதரனேயுன்னை
கண்குளிரக் கண்டு கொண்டேன் தண்டனிட்டேன் புரசைவளர்
அனுபல்லவி
செல்வாக்கு இல்லாத என் வாக்கு உன் காதில்
விழவில்லையா தயவில்லையா ஐயா நீ கருணைக்கடலில்லையா
சரணம்
கல்லாதவனெனினும் பொல்லாதவனெனினும்
செல்வம் உள்ளானின் புகழ் பாடும் இவ்வுலகில்
பிறவாமலிருக்க வரம் வேண்டும் தவறிப்
பிறந்தாலும் உன்னை மறவா வரம் வேண்டும்
இராகம்: சுத்த தன்யாசி தாளம். : சாபு
No comments:
Post a Comment