எத்தனை முறை........
பல்லவி
எத்தனை முறை சொன்னாலுமுன் நாமம்
என் நாவில் தித்திக்குதே என் சென்ன கேசவா
அனுபல்லவி
பத்தரை மாற்றுப் பசும்பொன்னே மணியேயென
நித்திரை நினைவில் நீங்காப் பரம் பொருளே
சரணம்
சித்தம் தெளிந்தென் சிந்தை மகிழ்ந்திட
நித்தமுன்றன் கழலடி நினைவொன்றே போதுமே
ம.காலம்
உத்தமனே உயர் தத்துவப் பொருளே
வருணப்ரிய மயில் வாகனன் மாமனே...
இராகம் : வருணப்ரியா
தாளம் : கண்ட ஜம்பை
No comments:
Post a Comment