ஜங்காரத்வனி .....
பல்லவி
ஜங்காரத்வனி செய்து வண்டாடும் சோலைதனில்
சுருங்கார லீலை செய்யும் கன்னலே கேசவா
அனுபல்லவி
மங்காத கீர்த்தி பெரும் சங்கீத மும்மூர்த்திகள்
கொண்டாடிப் பண்ணிசைக்கும் ஓங்கார நாதப்பொருளே
சரணம்
தங்காத பொருள் வேண்டேன் தணியாத புகழ் வேண்டேன்
செங்கமலம் தினம் பணியும் சங்கரனார் துதிக்கு முன்
மத்திம காலம்
பங்கய மலர்ப் பாதம் நானென்றும் மறவாத நிலை ஒன்றே போதும்
இராகம் : ஜங்காரத்வனி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment