வா வா வென்றழைத்தால்....
பல்லவி
வா வா என்றழைத்தால் போதாதோ
வருமிடர் தவிர்த்து வாஞ்சையுடன் எனைக்காக்க
அனுபல்லவி
தேவேந்திரன் மகன் பார்த்தனுக்குதவிய
தேவாதி தேவா ஶ்ரீ வாசு தேவா
சரணம்
கோவர்த்தனமேந்தி ஆவினம் காத்தவா
கோபியர் மனம் மகிழ லீலைகள் புரிந்தவா
கோதண்டம் தனையேந்தி அரக்கரை மாய்த்தவா
திருச்சக்கரமேந்தும் ஹாடகாம்பரனே வா
இராகம் : ஹாடகாம்பரி
தாளம் : கண்டசாபு
No comments:
Post a Comment