கமல மலர்.........
பல்லவி
கமல மலர் நிறைந்த தடாகம் போலுமே
கமல நாபனே நீ காட்சி தந்தாய்
அனுபல்லவி
கமல நயனம் கமலச் செம் பவளவாய்
மலர்ந்த கமல மலரே திருமுகம்
சரணம்
இதயக் கமலம்தனை அலங்கரிக்கும் ரூபவதி
திருமகள் செங்கமலம் கேசவா
உந்திக் கமலம் தரிக்கும் உந்தன்
சரண கமலம் சரணம் சரணம்
இராகம் : ரூபவதி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment