மாமதுரை.....
பல்லவி
மாமதுரை மீனாக்ஷி தாயே
மனம் கனிந்து உன்னருளைத் தாயேன்
அனுபல்லவி
தேமதுரத் தமிழால் பாமாலை சூட்டியே உன்றன்
பூமலர்த்தாள் பணிந்தேன் மலையரசன்தன் மாதவமே
சரணம்
தஞ்சமென்று வந்தேன் தாயே என்னை நீ தள்ளலாகுமோ
வஞ்சமொன்றறியேன் எனக்குமுன்னருள்
பஞ்சமென்று கூறலாகுமோ
நெஞ்சமெல்லாம் நினைந்து வந்த என்னையே
அஞ்சலென்றபய கரம் நீட்டி ஆண்டு கொள்வாயே
இராகம் : முகாரி தாளம். : ரூபகம்