Saturday, 13 April 2024

 எனக்குமுனக்குமென்ன…..



                    பல்லவி


எனக்குமுனக்குமென்ன பந்தம் ஶ்ரீராமா

மனமறிய விரும்புதே ஜனகனின் மருகனே


                   அனுபல்லவி


வனமாலை கௌஸ்துபமணிந்தவனே ஶ்ரீதரனே

அனங்கனைப் பிரமனைப் படைத்த மாதவனே


                     சரணம்

சனகாதி முனிவர்களும் தேவருமிந்திரனும்

தினம் துதிக்கும் ஶ்ரீமன் நாராயணனே

உனதருளாலன்றோ உலகில் பிறந்துழன்றேன்

தினகர குலத்தோனே கேசவனே உரைத்திடுவாய்

No comments:

Post a Comment