பார்த்தேன்! ரசித்தேன்! பாடல் புனைந்தேன் !
பல்லவி
சோலை நடுவிலே ஊஞ்சலிலாடியே
லீலைகள் புரிந்திடும் கண்ணனைத் துதித்தேன்
அனுபல்லவி
ஆலிலை பாலனவன் கேசவன் மாதவன்
கோலக்குழலூதும் கோவிந்தன் மதுசூதனன்
சரணம்
நூலிடை கோபியர் கொஞ்சும் கோபாலன்
ஏலவார்குழலி யசோதை மைந்தன்
பூலோகம் போற்றும் ஶ்ரீவாசுதேவன்
சாலச்சிறந்த கோகுலந்தனிலே
லாலி லாலி சுப லாலி
லாலி லாலி சுப லாலி…….
No comments:
Post a Comment