சிவனுனைத் துதித்தேன்….
பல்லவி
சிவனுனைத் துதித்தேன் பவபயம் களைந்தேன்
அவனியிலுனையன்றி வேறு துணை எனக்கில்லை
துரிதம்
சிவகணங்களும் நந்தியும் நான்முகனும்
இந்திராதி தேவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
புவனமுண்டுமிழ்ந்த கேசவன் நேசனே
தவயோகியர் ஞானியர் துதித்திடுமீசனே
சரணம்
சிவகாமி பங்கிலுறை சிதம்பரநாதனே
குவலயம் கொண்டாடும் தில்லை நடராஜனே
கவலை பிணியிடரனைத்தையும் களைந்திடும்
புவனேச்வரனே பிரகதீச்வரனே
No comments:
Post a Comment