உன்னைத் தவிர வேறு தெய்வம்…..
பல்லவி
உன்னைத் தவிர வேறு தெயவம் உலகிலுண்டோ
அன்னையே திரிபுரசுந்தரி ஶ்ரீலலிதாம்பிகையே
அனுபல்லவி
மன்மதனைப் படைத்த கேசவன் சோதரியே
அன்னபூரணியே அகிலாண்டேச்வரியே
சரணம்
பன்னக பூஷணியே பர்வதவர்த்தனியே
உன்னருளாலன்றோ உலகனைத்துமியங்குவது
இன்னலிடர்களையும் உமாமகேச்வரியே
பன்னகாபரணனின் ஒரு பாகத்தமர்ந்தவளே
கன்னங்கரிய குழலும் கண்மூன்றுமுடையவளே
சின்னஞ்சிறு இடையில் செம்பட்டணிந்தவளே
புன்னகை பூத்த முகமலருடையவளே
அன்னவாகனியே அழகின் இலக்கணமே
சொல்லுக்கும் பொருளுக்குமெட்டாத பேரழகே
நல்லடியார் பலர் போற்றும் நாராயணியே தாயே
பொல்லா அரக்கர்களைப் பொடிப்பொடியாய் செய்தவளே
எல்லாமும் நீயென்றே மலர்ப் பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment