மனக்கவலை எனக்கில்லை…..
பல்லவி
மனக்கவலை எனக்கில்லை உனதருளால் தாயே
கனகசிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே
அனுபல்லவி
வனமாலையணிந்த கேசவன் சோதரியே
அனங்கனுக்கருள் செய்த காமேச்வரியே
சரணம்
தினகரனொளியை மிஞ்சுமொளியுடையவளே
தனக்குவமையென்று ஒருவருமில்லாதவளே
சனகாதி முனிவரும் தேவரும் மூவரும்
வணங்கிடும் தேவியே ஶ்ரீலலிதாம்பிகையே
No comments:
Post a Comment