நாடிடுவீர்…..
பல்லவி
நாடிடுவீர் நாளும் நமச்சிவாயனையென்றும்
பாடிப் பரவியவன் நாமங்களோதி
அனுபல்லவி
காடுதனில் திரியும் கபாலீசனை
தோடுடைய செவியன் கேசவன் நேசனை
சரணம்
மாடும் கன்றும் மனைவியும் பிள்ளைகளும்
ஆடையாபரணங்களும் தேடிய செல்வமும்
கூட வராதென்பதும் இருவினைப் பயன்களும்
பாவபுண்ணியங்கள் மட்டுமே வருமென்றறிந்து
No comments:
Post a Comment