Saturday, 13 April 2024

          பாழுமுடல் படுத்தினாலும்….


                         பல்லவி


      பாழுமுடல் படுத்தினாலும் ஶ்ரீ ராமா

      வாழும் வரை நீயே என் துணை😭


                        அனுபல்லவி


      ஆழ்கடல் நடுவே கிடந்துறங்கும் கேசவனே 

      ஊழிக்காலத்திலாலிலையில் துயில்பவனே


                          சரணம்

      ஏழேழ் பிறவிக்குமெந்தனைக் காக்கும்

      ஏழிசையை ரசிக்கும் ஶ்ரீமன் நாராயணனே

      ஊழ் வினையால் பிறந்துழலுமெனைக்காக்க

      வாழ்வில் உனையன்றி வேறு யாருளார்


       श्री  राम राम  रामेति  रमे  रामे  मनोरमे  । 

       सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने  ॥ 

No comments:

Post a Comment