मूलथो ब्रह्मा रूपाय, मध्यथो विष्णु रूपिणे,
अग्रथ शिव रूपाय वृक्ष राजाय वे नमः
அக்ரத சிவ ரூபய, வ்ருக்ஷ ராஜாய தே நம.
யாருடைய வேர்கள் பிரம்மாவோ,
யாருடைய தண்டு விஷ்ணுவோ, யாருடைய கிரீடமோ சிவபெருமானோ , மரங்களின் அரசனுக்கு வணக்கம்
அரசே அனுதினம்….
பல்லவி
அரசே அனுதினம் வணங்கித் துதித்தேன்
சராசரங்களனைத்துக்கும் முதலே
அனுபல்லவி
நரசுரனைவரும் கரம் பணிந்தேத்தும்
பரம் பொருளாகவே பாவித்து நானும்
சரணம்
வேரின் மூலத்தில் பிரமனாகவும்
நடுப்பாகத்தில் கேசவன் நாராயணனாகவும்
வளர்ந்த மேல் பாகத்தில் நமச்சிவாயனாகவும்
விளங்கும் மரங்களின் தலைவனுனையே
அரச மரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாகநம்பப்படுகிறது. மும்மூர்த்தி வடிவம் கொண்ட அரச மரத்தின் அடிப்பக்கம்பிரம்மா, நடுமரம் விஷ்ணு, கிளைகள் கொண்ட மேற்பாகம் சிவன் என்பர்.
இம்மரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது. எனவே இந்த மரத்தைஎக்காரணத்தைக் கொண்டும் வெட்டுவதும், அதன்மேல் ஏறுவதும், கிளைகளை ஒடிப்பதும் தகாத செயல்கள் ஆகும். அப்படிச் செய்தால் எதிர்பாராத விபத்து, வறுமை,துன்பங்கள் ஏற்படும் என்பர்.
அரச மரத்திற்கு "அஸ்வத்தா' என்ற பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால்,"வழிபடுபவர்களின் பாவத்தை மறு நாளே தீர்ப்பது' என்று பொருள்சொல்லப்படுகிறது.
"ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத்' என்று பத்ம புராணம்சொல்கிறது. அரச மரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும்; செல்வவளம் பெருகும். கோவில்களில் உள்ள அரச மரத்திற்கு இன்னும் அதிகமான சக்திஉண்டு. இந்த அரச மரத்தடியில் விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பார்.அத்துடன் நாகர் சிலைகளும் அங்கு இருக்கும். இதனால் இது தோஷ நிவர்த்திமரமாகவும் கருதப்படுகிறது.
ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் அதன் வேர் ஒரு குணம், பட்டை ஒரு குணம்,கிளை, இலை, கொழுந்து ஒரு குணம் என்று மாறுபட் டிருக்கும். ஆனால், அரச மரம்மட்டும் வேர், பட்டை, பூ, பழம் உட்பட அனைத்தும் ஒரே குணம் கொண்டவை. இதில்பிராண வாயும் துவர்ப்புச் சத்தும் மிகுதியாக உள்ளது.
இம் மரத்திலிருந்துமுப்பது மீட்டருக்குள் எந்த ஒரு கோவில் இருந்தாலும், அந்தக் கோவிலில்மனஅமைதி இருக்கும். மனஅமைதி கொடுப்ப திலும் ரத்த ஓட்டத்தைச்சீர்செய்வதிலும் அரசமரம் முதன்மையான இடத்தை வகிக்கிறது.
புத்தருக்கு ஞானம்பிறந்தது அரசமரத்தடியில் என்று வரலாறு சொல்லும்.
விஞ்ஞான ஆய்வின்படி ஒரு அரசமரம் நாளொன்றுக்கு ஆயிரத்து எண்ணூறு கிலோகரியமில வாயுவை உட்கொண்டு, இரண்டா யிரத்து நானூறு கிலோ பிராண வாயுவைவெளியிடுகிறது. அரசமர சமித்துகளை மந்திரப் பூர்வமாக ஹோமத் தீயிலிட்டு,அந்த ஹோமப் புகை வீட்டில் பரவினால் கண்களுக்குத் தெரியாத பூச்சிகள்,கிருமிகள் அழிந்துவிடும்.
No comments:
Post a Comment