மாயாதீர்த்தஸ்வரூபிணி…..
பல்லவி
மாயாதீர்த்தஸ்வரூபிணி மகிஷாசுரமர்த்தினி
ஓயாதுனைத்துதித்தேன் தாயே எனக்கருள்வாயே
அனுபல்லவி
காயாம்பூ வண்ணன் கேசவன் சோதரி
தாயுமானவன் நாயகியே தர்மசம்வர்த்தினி
சரணம்
சாயாதரங்கிணி சாமுண்டேச்வரி
பாயசான்னப்ரியே பர்வதவர்த்தினி
தீயேந்தும் நெற்றிக்கண்ணுடையாளே
நாயகி நான்முகி நாரயணி நீயே
No comments:
Post a Comment