ஶ்ரீராம தூதனை……
பல்லவி
ஶ்ரீராம தூதனை மனமாரத்துதித்தேன்
ஆராவமுதன் கேசவனைப் பணிந்தேத்தும்
அனுபல்லவி
கோர அரக்கரை கொன்றழித்த சூரனை
வீராஞ்சநேயனை அஞ்சனை மைந்தனை
சரணம்
ஶ்ரீராம நாம ம் ஒலிக்குமிடமெலாம்
ஓரமாயமர்ந்து கண்களில் நீர் பெருக
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கும்
பாரெங்கும் புகழ் விளங்கும் வாயுகுமாரனை
यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकांजलिम्
वाष्पवारिपरिपूर्णालोचनं मारुतिं नमत राक्षसान्तकम् ॥
எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அரக்கரை வேறறுத்த அனுமன் என்று தெரிந்துகொள்.
No comments:
Post a Comment