*திருமாங்கல்ய சரடினாலே கருமாரி அம்பிகையின் அலங்காரம்*
ஸர்வ மங்கல-மாங்கல்யே
சிவே ஸர்வார்த-ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே
எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம். *ௐ ஸ்ரீ மாத்ரே நம:*
மங்களாம்பிகையை….
பல்லவி
மங்களாம்பிகையை மகாதேவியை
திங்கள் பிறையணிந்த ஈச்வரியைத் துதித்தேன்
அனுபல்லவி
பொங்கரவுக்குடையின் கீழமர்ந்தவளை
சங்கரன் பங்கிலுறை கேசவன் சோதரியை
சரணம்
மங்கலமனைத்தும் தருபவளை
மங்கல வடிவான கௌரி நாராயணியை
மங்கலம் பொருந்திய முக்கண்ணியை
மங்காத புகழ் மேவும் திரிபுரசுந்தரியை
सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके ।
शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमोऽस्तु ते ॥
No comments:
Post a Comment