என்னுள்ளிருந்தெனை…..
பல்லவி
என்னுள்ளிருந்தெனையாட்டுவிக்கும் தாயே
உன்னைத் துதித்தேன் மாகாளி பைரவியே
அனுபல்லவி
சென்ன கேசவன் சோதரியே மாயே
உன்னருளின்றி ஓரணுவுமசையுமோ
சரணம்
எந்திரம் நானதன் இயக்கம் நீயே
குடில் நானெனில் குடியிருப்பவள் நீயன்றோ
வண்டி மட்டும் நானதன் சாரதி நீயே
நான் நானல்ல அனைத்தும் நீயே
"அம்மா காளி! நீ இயக்கபவள், நான் எந்திரம்; நீ குடியிருப்பவள், நான் வீடு; நான் வண்டி, நீ ஓட்டுபவள்; எப்படி நடத்துகிறாயோ அப்படி நடக்கிறேன். எப்படிச் செய்விக்கிறாயோ அப்படி செய்கிறேன். எப்படி பேசுவிக்கிறாயோ அப்படிப் பேசுகிறேன். நான் இல்லை, நான் இல்லை , நீயே, நீயே."
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா் 🤲அம்மே சரணம்
No comments:
Post a Comment