Saturday, 13 April 2024

         திரிபுரசுந்தரி……


                  பல்லவி


       திரிபுரசுந்தரி கௌரி

       பரிபூரணி உன் பதம் பணிந்தேன்


                     துரிதம்


       சுரபதி ரதிபதி சரச்வதியின் பதி

       பசுபதி ஶ்ரீபதி நரர் சுரர் வணங்கிடும்


                  அனுபல்லவி


      கிரிதரன் சென்ன கேசவன் சோதரி

      திரிபுரமெரித்த சங்கரன் நாயகி


                   சரணம்


     திருச்சக்கரம்தனில் வீற்றிருப்பவளே

     மருதூர் வளர் பெருநலமுலையாளே

     கருமாரி நீயே காமாக்ஷி நீயே

    இருவினைப் பயனகல எனக்கருள்வாயே


चरणबवनशाला कुचभरोल्लसनमालया

कुचोपमितशैलया गुरुकृपालसद्वेल्या।

मदारुनकपोलया मधुरगीतवाचाल्या

कायाऽपि घनिलया क्वचिता वयं लीलया ॥ 

No comments:

Post a Comment