விந்தியவாசினியை…..
பல்லவி
விந்தியவாசினியை அம்பிகையைத் துதித்தேன்
முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட
அனுபல்லவி
மந்திரப்பொருளான கேசவன் சோதரியை
வந்திப்பர்க்கருள் தரும் பரமேச்வரியை
சரணம்
யந்திர மேருவில் வீற்றிருப்பவளை
சந்திரனின் பிறையை அணிந்திருப்பவளை
சிந்திப்பவர்க்கு எளிதான சுந்தரியை
அந்தரி நீலியையகிலாண்டேச்வரியை
No comments:
Post a Comment