ஒரு நூறு பாடல்…..
பல்லவி
ஒரு நூறு பாடல் உனைப்போற்றி நான் பாட
குருவாயுரப்பா எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
திருமாலே கேசவனே தீனருக்கருள்பவனே
பெருமைக்குரிய கலியுகக்கடவுளே
சரணம்
சிறு மூர்த்தியென்றாலுமுன் கீர்த்தி பெரிதே
வருமிடர் களைந்திடும் வல்லமை படைத்தவனே
இருவினைப் பயன் தொலைய உனையே துதித்தேன்
கருணைக் கடலே ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment