Saturday, 13 April 2024

 


            

    என்னுடனெப்போதும்….


                 பல்லவி


  என்னுடனெப்போதுமிருக்கும் ஶ்ரீராமா

  உன்னுடைய திருவடியே வைகுண்டமெனக்கு


                  அனுபல்லவி


தென்னிலங்கையரக்கனைக் கொன்றழித்த கேசவனே

நன்று தவ முனிவோர் வேள்வியைக்காத்தவனே


                     சரணம்


 அன்றிவ்வுலகை மூவடியாலளந்தவனே

 பன்றி வடிவெடுத்து உலகை மீட்டவனே

 அன்றோரணங்கின் மானம் காத்தவனே

 மன்னுபுகழ் அயோத்தியையாளும் ராகவனே


              “நாமத்ரய மகிமை”

ஒருமுறை அன்னை லலிதா திரிபுரசுந்தரிக்கும், பண்டாசுரன் என்பவனுக்கும் பலமான போர் ஒன்று நடந்தது. இப்போரில் எதிரெதிர் திசையில் நின்று கொண்டு மஹா அஸ்திரங்களை வீசி ஒருவருக்கு ஒருவர் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அன்னை சக்தியின் சேனையின் மீது பலதரப்பட்ட அஸ்திரங்களை தொடுத்து போர் புரிந்து கொண்டிருந்தான் பண்டாசுரன். அதற்கு எதிர்வினை அஸ்திரங்களையும் அன்னையின் சேனை தொடுத்து வெற்றி கொண்டார்கள்.


இப்படியே போர் தொடரும் பொழுது திடீரென பண்டாசுரன் மஹா ரோகாஸ்திரம் என்னும் அஸ்திரத்தை அன்னை சேனையின் மீது தொடுக்க பலவிதமான நோய்கள் வந்து தாக்கி சக்திகள் அனைவரும் பரிதவித்து நின்றனர். அப்பொழுது லலிதா திரிபுரசுந்தரி ஆகிய அன்னை பராசக்தி சர்வரோக நாமத்ரய என்னும் மகா சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை பண்டாசுரனை நோக்கி தொடுத்து எல்லா நோய்களையும் விரட்டி அடித்து வெற்றி கொண்டார்.


இந்த மந்திரத்தை சொல்வதற்கு தனியாக யாரிடமும் தீட்சை பெற வேண்டிய அவசியமில்லை. யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை நாம் உச்சரிப்பதன் மூலம் நம்மிடம் இருக்கும் நோய் நொடிகள் யாவும் நீங்கும். நமக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த மந்திரத்தை ஜபமாக ஜபித்து வந்தால் நம் உடலில் இருக்கும் சக்திகள் தூண்டப்பட்டு நோய்களை எதிர்த்துப் போராடும். சாதாரணமாக ஒரு நாளைக்கு 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் அல்லது 108 முறை எழுத்து வடிவமாக எழுதினாலும் பெறற்கரிய பலன்கள் கிடைக்கும்.


நாமத்ரய மஹா மந்திரம்:
ஓம் அச்சுதாய நம!
ஓம் அனந்தாய நம!
ஓம் கோவிந்தாய நம!!


ॐ अच्युताय नमः ॥ 

ॐ अनंताय नमः ॥

ॐ गोविन्दाय नमः ॥

No comments:

Post a Comment