அம்மா உன்னழகை….
பல்லவி
அம்மா உன்னழகை வர்ணிக்க வார்த்தையில்லை
இம்மாநிலம் போற்றும் திரிபுரசுந்தரியே
அனுபல்லவி
பெம்மான் சிவனினிடமமர்ந்தவளே
நம் பெருமாள் கேசவனின் அன்பு சோதரியே
சரணம்
உம்பர் முனிவர் பணி அகிலாண்டேச்வரி
நம்புபடியார்க்கு இன்பமளிப்பவளே
கும்ப முனிக்கருள் செய்த ஈச்வரியே
வெம்பவக் கடல் கடக்க நீயேயென் துணை
No comments:
Post a Comment