अष्टमीचन्द्र-विभ्राज-दलिकस्थल-शोभिता ।
मुखचन्द्र-कलङ्काभ-मृगनाभि-विशेषका ॥
Her forehead appears like the moon on the eighth day. Eighth day from the full moon or new moon is called ashtami. The moon appears beautiful with even curves on both sides on the eighth day.
அம்பிகையின் நெற்றிப் பகுதி யோக மார்க்கத்தில் லலாட ஸ்தானம். மிகவும் முக்கியமான இடம். அதாவது ஆக்ஞா சக்கரம். இப்போது இந்த நெற்றியினுடைய தரிசனம் கிடைக்கின்றது. அந்த நெற்றிக்குத்தான் அஷ்டமி சந்திர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா என்று பெயர். அந்த நெற்றிக்கு வசின்யாதி வாக் தேவதைகள் ஒரு உவமை கொடுக்கின்றார்கள். அது என்ன உவமை எனில் அஷ்டமி சந்திரனைப்போன்று பிரகாசிக்கும் நெற்றியை உடையவள் என்று பொருள்.
ஏன் இங்கு அஷ்டமி சந்திரனை உவமையாக்க வேண்டும். சந்திரனுடைய கலைகளைக் கவனிப்போம். ஒரு பட்சத்தை எடுத்துக் கொள்வோம். அமாவாசையிலிருந்து பௌர்ணமி, வளர்பிறை. பிறகு பௌர்ணமியிலிருந்து அமாவாசை. இப்படி பதினைந்து நாட்களாக சந்திரனின் கலைகள் வளர்ந்து தேய்ந்து, தேய்ந்து வளர்ந்து என்று மாறுபாடு அடைந்து கொண்டேயிருக்கின்றது. இப்படி ஒரு பட்சத்தின் பதினைந்து நாட்களில் நடுவில் இருப்பது அஷ்டமியாகும்.
இந்த அஷ்டமி அன்றுதான் சந்திரன் சரிபாதியாக இருக்கிறது. அம்பிகையினுடைய முகமே சந்திரனுக்கு உவமையாகின்றது. இப்படி முழு முகமும் சந்திரன் என்று சொன்னோமெனில் இந்த நெற்றிப் பகுதி மட்டும் பாதி சந்திரனாகின்றது. அதாவது அர்த்த சந்திரன். இப்படி சந்திரனின் சரி பாதியாக அம்பிகையின் நெற்றிவிளங்குகின்றது என்று இந்த நாமம் சொல்கின்றது. இது நேரடியான பொருள்.
சிதக்னி குண்டத்திலிருந்து எழுந்த அம்பிகையான சொரூப தரிசனம் ஒரு ஆனந்த அனுபவம். இருந்தது இந்த ஆனந்தத்திற்கு மேல் இன்னொரு ஆனந்தம் இல்லை என்பதாக அந்த கிரீடம் இருக்கின்றது. இப்போது இந்த நாமத்தில் அஷ்டமி என்கிற பெயர் வருகின்றது. இந்தப் பக்கம் ஏழு அந்தப் பக்கம் ஏழு என்று நடுவே இருக்கின்றது. இந்த நடு என்பது சமநிலை குறிப்பதாகும்.
இப்போது இதேபோல் இந்த ஆத்மானுபவம் பெற்ற சாதகன் என்ன ஆகிறான் எனில், அவன் ஒரு நிலைக்கு வருகின்றான். எந்தப் பக்கமும் சாயாத ஸ்திதப் பிரக்ஞன் என்கிற நிலைக்கு வருகின்றான். அவனை நன்மை தீமை என்ற இருமை பாதிக்காது. புண்ணியம் பாவம் பாதிக்காது. சரி, தவறு பாதிக்காது. இன்பம் துன்பம் பாதிக்காது. இந்த உலகத்தில் இருக்கக் கூடிய எந்த இருமைகளும் (duality) அவனை பாதிக்காது. நெருங்காது.
ஏனெனில், அவன் மத்தியில் இருக்கின்றான். இனி எந்தப் பக்கமும் சாயாத, சலனமில்லாத சலனமற்ற நிலையை எய்திவிடுகின்றான். மனம் நின்று போய்விடுகின்றது. அவன் உலக நியதிகளுக்குண்டான இருமைகளை கடந்துவிட்டான். இந்த நெற்றியினுடைய தரிசனம்தான் ஸ்தித பிரக்ஞ நிலையை உணர்த்துகின்றது. எப்படி அஷ்டமி சந்திரன் சரியாக இந்தப் பக்கம் ஏழு நாள் அந்தப் பக்கம் ஏழு நாள் நடுப்பாதியாக நிற்கிறதோ, அதுபோல ல லிதாம்எபிகையை வணங்குபவன் எந்தப பக்கமும் இல்லாமல் நடு நிலையாக நிற்கிறான். இந்த நிலையை பௌத்தத்தில் மாத்யாத்மிகம் என்கிறார்கள். நடுவில் நிற்றல் என்று பொருள்.
No comments:
Post a Comment