Saturday, 13 April 2024

 


     சீதாபதியே……


                 பல்லவி

   சீதாபதியே ஶ்ரீராமா

   நீதான் கதியென உனைத்துதித்தேன்

              அனுபல்லவி

   பாதாரவிந்தம் பணிந்தவர்க்கு

   ஆதாரவளிக்கும்  கேசவனே

                 சரணம்

   சாதாரணரையும் காத்தருளும்

   ஏதமிலாத கோதண்ட ராமனே 

   சீதக்கடல் நடுவே துயில் கொண்ட

   மாதவனே ஶ்ரீமன் நாராயணனே

No comments:

Post a Comment