पदद्वय प्रभाजाल पराकृत सरोरुहा ॥ 19 ॥
நகதீதிதி சஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா
தாமரை மலரினும் அழகிய பாதங்களைக் கொண்ட ஸ்ரீலலிதையின் கால் விரல் நகங்களின் பிரகாசமே நம் அறியாமையின் இருள் அகற்றுகின்ற ஞான ஒளி அருள்பவை. ஸ்ரீலலிதாம்பிகையின் பாதகமலங்களை சரணடைவோம்.
உமையே லலிதாம்பிகையே…..
பல்லவி
உமையே லலிதாம்பிகையே உந்தன்
கமல பதம் பணிந்தேன் அருள் புரிவாயென
அனுபல்லவி
கமலாசனனும் அமரேந்திரனும்
அமரரும் துதித்திடும் கேசவன் சோதரி
சரணம்
கமல மலர்ப் பாதங்களில் அழகுடன்
அமைந்திருக்கும் விரல்களில் விளங்கும்
ரமணீயமான நகங்களின் காந்தியினால்
என் அறியாமையெனும் இருளைப் போக்கும்
No comments:
Post a Comment