Saturday, 13 April 2024

 பார்த்தேன்! பரவசித்தேன்!பாடல் புனைந்தேன்!



சித்திரத்தில் கண்டுனை…..


      பல்லவி


சித்திரத்தில் கண்டுனை பக்தியுடன் துதித்தேன்

நித்திலத்தொத்தே எனக்கருள்வாய் ஶ்ரீராமா

             அனுபல்லவி

சத்திய சீலனே கேசவனே மாதவனே

உத்தமி ஜானகியின் மனங்கவர்ந்த நாயகனே

                சரணம்

பத்தரை மாற்றுப் பசும் பொன்னே கன்னலே

தித்திக்கும் இன்னமுதாய்த் திருநாமமுடையவனே

கத்தும் கடல் மீது உறங்கும் நாராயணனே

எத்திசையும் புகழ் விளங்கும் அயோத்தி மன்னவனே

No comments:

Post a Comment