ஶ்ரீராமனையே….
பல்லவி
ஶ்ரீராமனுனையே தினம் துதித்தேனே
பூமியில் உனையன்றி வேறு துணை எனக்கில்லை
அனுபல்லவி
தாமரை நாபனே கேசவனே மாதவனே
மாமறைகள் போற்றும் புருஷோத்தமனே
சரணம்
பாமரர் பண்டிதரனைவரும் கொண்டாடும்
மாமனிதனே மனிதர்குல மாணிக்கமே
கோமகனே அயோத்தி மாமன்னனே
தூமலர் தூவியுன் பாதம் பணிந்து
No comments:
Post a Comment